காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த […]
