தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]
