மனைவி பிரிய நினைத்ததால் கொடூரமாக எரித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றியவர் ஜோனாதன் டேவல். இவருடைய மனைவி அலேக்சியா. ஒருநாள் ஜாகிங் சென்ற தன் மனைவியை காணவில்லை என்று ஜோனாதன் டேவல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய போலீசார் 2 நாட்களுக்குப் பின் மரங்கள் அடர்ந்த பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த அலேக்சியாவின் உடலை கண்டுபிடித்துள்ளனர். […]
