கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவர் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அமல்ராஜும், ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களது மகன் […]
