Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
தேசிய செய்திகள்

நிபா, வெள்ளம், கொரோனா… 3 முறை ஒத்தி வைப்பு… இளஞ்ஜோடிக்கு எப்போது திருமணம்?

கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் வெள்ளத்தால் 2 முறை தள்ளிப்போன இளஞ்ஜோடிகளின் திருமணம் தற்போது 3ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர்  26 வயதான பிரேம் சந்திரன். அதேபகுதியை சேர்ந்தவர் 23 வயதான சந்திரா சந்தோஷ். இவர்கள் இருவருமே  குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டாரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

30-ஆம் தேதி திருமணம்… சேலத்தில் மணமகன் கைது… சாட்சியாக அத்தான்மார்கள்.. பரபரப்பை கிளப்பிய பேனர்..!!

மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண விழா மற்றும் பல விசேஷங்களுக்கு பேனர் வைப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேனர் வைத்து விழாவுக்கு வருபவர்களை ஈர்க்க நினைப்பார்கள்.    அதன்படி சேலம் மாவட்டத்தில் திருமணத்திற்காக வைத்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாவில் தீவிபத்து… 11 பேர் பலி… 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

ஈரான் நாட்டில் திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என்னை கண்டுபிடித்ததற்கு நன்றி’ – காதலில் உருகும் பிரியங்கா சோப்ரா..!!

கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா-நிக் ஜோனஸ், தங்களது ஒராண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் சென்ற ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தனது அழகு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் நிக் ஜோனஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

50 வயது அம்மா…. ட்விட்டரில் மாப்பிளை தேடும் மகள்… வைரல் பதிவு..!!

‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர். ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…!!

அமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள்  இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli)  தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என யாருமே   எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ […]

Categories
தேசிய செய்திகள்

“கண்ணெதிரே மரணம்” மகளின் திருமணத்தில் பாட்டு பாடிய தந்தைக்கு நிகழ்ந்த துயரம்…!!

திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார். கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை […]

Categories

Tech |