வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் […]
