சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல தேங்கியது. இதனையடுத்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீரென பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலவியதால் பொதுமக்கள் […]
