மாணவர்கள் தேர்வு எழுதும்பொழுது செய்யவேண்டியவை, கவனிக்க வேண்டியவை: தேர்வு நடக்கும் தினம் மாணவர்கள் வீட்டிலிருந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பிவிடுங்கள், பள்ளிக்கு சென்றதும் நண்பர்களுடன் தேர்வை பற்றி ஆலோசனை செய்ய வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் படித்த கேள்வியோ.. படிக்காத கேள்வியோ.. அத பற்றி அவர்கள் பேசும்பொழுது உங்களுக்கு மனதில் தேர்வை பற்றிய பயம் அதிகரிக்கும்.. அது உங்களை பலவீனமாக்கும். தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லவும். […]
