பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4ஆவது மகன் சந்தோஷ் குமார்.. இந்த சிறுவனுக்கு 6 வயதாகிறது.. இச்சிறுவன் நேற்று தன்னுடைய அண்ணன் மற்றும் அக்காவுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமலிருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் […]
