குடிநீர் கேன் உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தினால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க கோரி மூன்று நாட்களாக குடிநீர் கேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலைகளில் இருந்து குடிநீர் கேன்கள் வெளி நபர்களுக்கு வினியோகிக்கப் படுவதில்லை. பெரும்பாலும் சென்னை மக்கள் கேன் குடிநீரையே நீராதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில், இதனால் அவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பது […]
