கோடை கால சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே தர்பூசணி பழங்களின் விற்பனையானது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனியின் தாக்கமானது காலை 9 மணி வரை இருந்தாலும், பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோடை கால சீசனான ஏப்ரல், மே மாதங்கள் வருவதற்கு முன்னதாகவே தங்கச்சிமடம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து தர்பூசணி வியாபாரி ஒருவர் […]
