குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சித்தம்பலம் ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் வீட்டு மனை இடத்தின் உரிமையாளரான அங்காத்தாள் என்பவர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அங்காத்தாள் […]
