சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை பகுதியில் 47.50 அடி கொள்ளளவு உடைய வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. அதோடு இந்த வீராணம் ஏரியானது சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் […]
