குடிநீர் குழாயை விரைவில் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு பட்டுக்கோட்டை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கி வீணாகி வருகிறது. இந்நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]
