குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியிலிருந்து குனியமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளுக்கு குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோவை பொள்ளாச்சி சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய […]
