காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் வேரோடு சாய்ந்ததால் உட்கார்ந்த நிலையிலேயே காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டவராயன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து காவலாளியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஒரு மரத்திற்கு அடியில் உட்கார்ந்து சமையல் பாத்திரங்களை கழுவியுள்ளார். அப்போது பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க […]
