கலெக்டர் கருணாகரனின் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மூலம் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைகின்றன. மேலும் விவசாயிகள் இந்த கால்வாய் பகுதியில் வாழை, நெல், மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை கடந்த சில வாரங்களாக காலிங்கராயன் கால்வாயில் வெளியிடுவதாகவும், விளைநிலங்கள் […]
