காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை விரட்டியடித்தது. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் […]
