சிங்கவால் குரங்குகள் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் தான் அரிய வகை மூலிகை தாவரங்களும், உயிரினங்களும் இருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் வனபகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மான், காட்டெருமை, சிறுத்தை, யானை, சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி அமராவதி அணையை நோக்கி செல்கின்றன. […]
