வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வழியாக சொல்லும் வாகன ஓட்டிகள் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சத்தமிடுவதால் கோபத்தில் யானைகள் அவர்களைத் தாக்க முற்படுவதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் மலை உச்சியில் நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பதுடன், நீரோடைகளில் இருக்கும் பாறை மீது […]
