ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் பாப்பான்குளம் கண்மாயில் மீன்கள் அதிகம் காணப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து ஊரடங்கு நேரம் என்பதால் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் அங்கு மீன் பிடிக்க திரண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
