காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்ததை தெரியப்படுத்தும் எச்சரிக்கை கருவிகளை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கூடலூர் வன அலுவலர் ஓம்கார் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகளை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி வனசரகர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் எச்சரிக்கை கருவிகளை பொருத்தியுள்ளனர். […]
