கல்குவாரியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் இருக்கும் கல்குவாரியில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். அதோடு இந்த விபத்தில் காயமடைந்தவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் […]
