வியட்நாமில் கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது. வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh) என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். […]
