நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். இந்நிலையில் […]
