நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடந்தது. பீகார் (8), ஜார்கண்ட் (3), சண்டிகார் (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), […]
