பலத்த பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து, ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் […]
