படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்காததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உள்பட 6 பயிர்கள் மற்றும் பருவ கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு அதனை பராமரித்தும் வருகின்றனர். அதன்பின் கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்களில் அதிக அளவில் படைப்புழு தாக்குதல் இருந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, […]
