விளைநிலங்களை சமப்படுத்தும் பணிக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். புதுச்சேரி,நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் இடையே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராமங்கள் வழியாக இந்த சாலை செல்கின்றது. அதன்பின் இந்த சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்த நிலையில் அனைவருக்கும் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் விளைநிலங்களில் சாலை அமைப்பதற்காக சமபடுத்துதல் மற்றும் […]
