தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராம்தாஸ் நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்சவல்லி என்ற மனைவியும், சுமதி என்ற மகளும், அறிவுசுடர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மகாலிங்கம் விவசாய நிலத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை மீட்டு […]
