இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் அகமதாபாத்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணித்தின் போது, தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்ல உள்ளனர். […]
