சேலம் அருகே வனத்துறையையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை வனத்துறையினர் கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட சார்பு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் விழுந்து கதறி அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை […]
