கர்நாடக மாநில புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக சார்பில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபித்து புதிய அரசை அமைத்தது. மேலும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிருந்த சூழலில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் கூட்டணி அரசு சார்பில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து , ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் அளித்தார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று […]
