Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கிரேன் சரிந்து விழுந்து விபத்து …!!

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது இதில் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப்படை வீரர்கள் கிரேனுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கிரேன் அடியில் சிக்கி ….! ”10 தொழிலாளர்கள் பலி” பதைபதைக்கும் வீடியோ ..!!

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சச கிரேன் மூலமாக கப்பலில்  கண்டெய்னர் ஏற்றி வைக்கும் பணி நடைபெற்றது. கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்காக பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடிரென கிரேன் தொழிலாளர்கள் மீது  சரிந்து விழுந்தது. இதில் கிரேனுக்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை 6 பேர் […]

Categories
மாநில செய்திகள்

விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஷிப்யார்டில் மேனேஜர் பணிகள் …..!!

விசாகபட்டினத்திலுள்ள Hindustan Shipyard.ல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணியின் பெயர்:           Manager / Assistant காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: Electrical , Naval architecture, HR, Finance, Commercial, தகுதி:  சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.hslvizag.in  என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 11.1.2020க்கு முன் விண்ணப்பிக்கவும்.

Categories
மாநில செய்திகள்

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

ஆந்திர மாநிலத்தில் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசமாமிடி என்னும் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில்  பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியில்  வந்த ஒருவர் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு   உடனடியாக  குழந்தையை மீட்டு,  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. புதைப்பதற்கு முன் குழந்தையை யாரோ  தாக்கியுள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

மோதாதே….!! மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்…..வெங்கையா எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது  இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…”கழன்று சென்ற என்ஜின்” 10 KM_இல் நிறுத்தம்…!!

ஆந்திராவில் 25 பெட்டிகளை கழற்றிய நிலையில் இரயில் என்ஜின் மட்டும் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகின்றது.நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம்  மாவட்டத்தின் நார்சிபட்டினம் பகுதி வந்த போது  எதிர்பாராத வகையில் ரெயிலின் என்ஜின் பெட்டிகளை விட்டு தனியாக பிரிந்தது. என்ஜின் இழுத்துச் சென்ற 25 பெட்டிகளும் எந்த அசைவும் இல்லாமல் நடுவழியிலே தனியாக நின்றது. பின்னர் இரயிலில் இருந்த இரயில்வே துறை […]

Categories

Tech |