கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சிவகாசி கிழக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பதும், வெங்கடசாமி என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் […]
