Categories
கிரிக்கெட் விளையாட்டு

தாதாவின் சாதனையை முறியடித்த கோலி…

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்மூலம், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில், 348 ரன்கள் இலக்குடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’ – கிங் கோலி..!

தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத எங்களது அணுகுமுறைதான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்வதற்குக் காரணமாக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட கடைசி பந்துவரை இந்திய அணி தோல்வியடைந்துவிட்டோம் என்ற எண்ணமில்லாமல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது…!

நியூசிலாந்து அணியை வழிநடத்துவதற்கு வில்லியம்சனே சரியான நபர் என்றும், அவருடன் செலவழித்த நேரங்களை வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது எனவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஐந்தாவது டி20 போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியில் களமிறங்காமல் ஓய்வில் இருந்தனர். இதனால் நியூசிலாந்து பேட்டிங்கின்போது விராட் – வில்லியம்சன் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓப்பனிங் இறங்கிய சஞ்சு… மிடில் ஆர்டரில் நியாயம் சேர்த்த மனீஷ்: நியூசி.க்கு 165 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4-ஆவது டி20 போட்டி: ஹிட்மேன் கிடையாது… வெல்லுமா நியூசி… இந்திய அணி பேட்டிங்..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடந்த 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றை மாற்றிய இந்தியா… திக் திக் நிமிடம்… வெறித்தனம் காட்டிய ஹிட்மேன்… சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி..!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று, முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய ரோஹித்: நியூசி.க்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – கே.எல். ராகுல் இணை களமிறங்கியது. இந்த இணை பவர் ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சரியான பந்தைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvIND டி20 போட்டி : இந்திய அணி பேட்டிங்… தொடரை கைப்பற்றுமா?…

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று  2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  இந்த நிலையில் ஹாமில்ட்டனில் உள்ள செடன்பார்க்கில் இன்று பிற்பகல் 12 : 30 மணிக்கு 3-ஆவது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அது கோலியின் முடிவு… கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் அவதாரம் குறித்து கங்குலி!

ரிஷப் பந்திற்கு பதில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது கேப்டன் கோலியின் முடிவு என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ரீப்ளேஸ்மெண்ட்டாக கருத்தப்படும் ரிஷப் பந்த், சமீப காலங்களாக விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்துவந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். […]

Categories
இந்திய சினிமா சினிமா

விராட் கோலியும் நானும் ஒன்னு- கங்கனா ரனாவத்..!!

கிரிக்கெட் வீரர் விராத் கோலி போல் ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களை தான் சந்தித்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் இவரே…!

 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், ” உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது” என்றார். அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!

பழைய மொபைல் போன்கள், கம்பிகளை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது தீவிர ரசிகர் செதுக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ராகுல் பாரெக் என்பவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSL முதலாவது டி20 : விராட் கோலி காயம்… களம் இறங்குவாரா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை அணியுடனான முதலாவது டி20 போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 5ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்காக நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடக்கை சுண்டுவிரலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு ஒன்னும் தெரியாது… CAA குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை – விராட் கோலி!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான கோலி..!!

2010ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை என இந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்தியாவின் கோலி தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு முடிந்து 2020 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை என இந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில், நான்கு இங்கிலாந்து வீரர்கள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறித்தனமாக ஆடிய கிங் கோலி…T20 தரவரிசையில் முன்னேற்றம்…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி சர்வதேச  T 20 பேட்ஸ்மேன்  தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.  இந்திய  அணியின் கேப்டனான  விராட் கோலி 3- வகை கிரிக்கெட் போட்டியிலும் பேட்ஸ்மேன்   தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார் . சமீப  காலமாக ICC  டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கபட்டது.அதனால் T 20 பேட்டிங்க் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வெளியே  தள்ளப்பட்டார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அங்கிளான விராட் கோலி”… ரிஷப் பண்ட் குறும்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இளம் வீரர் ரிஷப் பண்ட் கோலியை ‘அங்கிள்’ என வாழ்த்திய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்  தனக்கே உரித்தான குறும்பு தனத்துடன் கோலிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது   வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. வங்கதேசத்துக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“50 டெஸ்ட் போட்டியில் கேப்டன்”… கங்குலியின் சாதனையை முறியடித்த கோலி..!!

50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.   இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு கேட்ச்சா…. டேவிட் மில்லரை பார்த்து வாயை பிளந்த கோலி.!!

நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.      இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி”… கிங் கோலி சாதனை..!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த வீரர்”… கோலியை பாராட்டிய பாக்., முன்னாள்கிரிக்கெட் வீரர்..!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்  52 (37) ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிரதமர் மோடி 69 -வது பிறந்தநாள்”…. விராட் கோலி, சச்சின் உட்பட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்கள்..!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு விராட் கோலி, சச்சின் உட்பட  கிரிக்கெட் வீரர்கள் பலர்  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கேக் வெட்டியும் ஆடிப்பாடியும் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி  கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலிக்கும், ரோகித்துக்கும் சண்டையா.? “எனக்கும் தோனிக்கும் கூட அப்படீன்னு சொன்னாங்க “…. சேவாக் அதிரடி..!!

எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்ததாக கூறினார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்  ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.  நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது இந்த பிரச்சனை அதிகமானதாகவும்,  அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் வெளிப்படையாக தெரிந்தது என்று தகவல் வெளிவந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவு” விராட், சச்சின் உட்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மதியம் 12 : 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினரும்  இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் மற்றும் இந்நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்த குளியல் போட்ட கோலி படை” இடம்பெற்றார் ரோகித்..!!

கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட்  பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND ஒருநாள் போட்டி…. இந்திய வீரர்கள் 3 பேர் சாதனை படைப்பார்களா..?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது    இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது நெருக்கடியை குறைத்தவர் இவர்தான்…விராட் கோஹ்லி பாராட்டு…!!!

ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான  ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி…!!!

வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ்  அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த விராட் கோஹ்லி…!!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி  பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப்  போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி  19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“சுஷ்மா சுவராஜ் மறைவு” கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவு..!!

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நாட்டை விட்டு பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள்   மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று முதல் டி20 போட்டி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதல்… ரசலுக்கு இடமில்லை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.   இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டி20 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல்  டி20 அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி தலைமையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்போதுள்ள இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள்” புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.!!

இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்  உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 வகையான  கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனி அற்புதமான வழிகாட்டி” ரெய்னா பிறந்த நாள் வாழ்த்து..!!

 அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்கள் அனைவருக்கும் அண்ணன் “எப்போதும் என் கேப்டன்” தோனியை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணன் என்று தல தோனியை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில்  உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 6 ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரிவில் இருந்து மீட்ட மேத்யூஸ்…. இலங்கை அணி 264 ரன்கள் குவிப்பு..!!

இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஹெட்டிங்லே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி, சஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி ஏற்கனவே 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டி பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில்  டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சில ஆண்டுகளாக பார்க்கிறேன்” உலகிலேயே தலை சிறந்த ஆட்டக்காரர் இவர் தான்…. ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

எனது பார்வையில் ரோகித்  தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணி உலகக்கோப்பையுடன் திரும்ப வேண்டும்” பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்புவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 302 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து  பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி இருந்தார். இந்நிலையில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி அதிரடியில் மிரண்டு போன கோலி….!!

தோனி எங்களுக்கு பயம் காட்டிவிட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது ஐ.பி.எல் கிரிக்கெட்…… கிளப் கிரிக்கெட் அல்ல….. டென்ஷனான விராட் கோலி…!!

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் திணறும் RCB…..!! அடுத்தடுத்து 3 விக்கெட் காலி…!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 6 (12)  , மெயின் அலியும்  9 (8) ,  டிவிலியர்ஸ் 9 (10)  ஆகியோர் ஹர்பஜன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL முதல் போட்டி CSK VS RCB….. கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் அவுட்…!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 12 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவர் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு உலக கோப்பை கிடைக்க வாய்ப்பு” – ஆஸி முன்னாள் கேப்டன்..!!

விராட் கோலி சிறப்பாக விளையாடினால்  இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக  ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து  தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரிக்கி பாண்டிங் உலக கோப்பை குறித்த பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் இந்திய அணியை பற்றி தெரிவித்த போது  உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் சிக்ஸர்!! துள்ளி குதித்து மகிழ்ந்த கோலி!!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சிக்ஸரை அடித்து விராட் கோலியை  துள்ளி குதிக்க வைத்தார்.  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இறுதியாக ஆட்டத்தின் கடைசி ஓவரான 50வது ஓவரை  ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் கடைசி ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் அப்போது களம் இறங்கிய  பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே தோல்விக்கு காரணம்” விராட் கோலி!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மற்றும் மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே  காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 359 என்ற கடினமான இலக்கை நிர்ணயம் செய்ய  அந்த  இலக்கை  ஆஸ்திரேலிய அணி எட்டி பிடித்தது. காரணம் நேற்றைய போட்டியில் புதிய வீரரான அஸ்டன் டர்னர் (Ashton Turner,) மார்கஸ் ஸ்டோய்னீஸ்க்கு பதிலாக களம் இறங்கினார். அவர்  இந்திய பந்து வீச்சை பதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.   இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் […]

Categories

Tech |