தென்காசி அருகே காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுனர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் இருவர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி பகுதியில் இதே போன்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் […]
