விழுப்புரம் மாவட்டத்தில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 293ஆக உள்ளது. இதில் 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 293 பேரில் கோயம்பேட்டில் […]
