விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தினமும் காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு இறக்குவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை சிறைச்சாலையில் ஏற்றியுள்ளனர் ஆனால் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் சிறைச்சாலையின் அருகே அமைந்திருந்த சாலையில் சென்ற மக்கள் தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கவனித்து சிறைச்சாலை வாயிலில் காவலுக்கு இருந்த காவலரிடம் தெரிவித்தனர். […]
