பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பிரதான சாலையில் பெருந்துறை நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார், இருவரது உடல்களையும் […]
