பொதுமக்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட மொழியனூர் ஊராட்சியில் நெடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் தனி ஊராட்சியாக நெடிக் கிராமத்தை அறிவிக்கவில்லை என்றால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம் என முடிவு எடுத்துள்ளனர். அதோடு […]
