குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகமலை பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 9-ஆம் தேதி வட்டார வள மையத்தின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் தற்போது நடைபெற்றுள்ளது. இவை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முகாம் பற்றிய […]
