பிகில்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். ‘பிகில்’ படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி, வருமான வரித்துறையினர் தமிழ்நாடு முழுவதும் அவ்விருவருக்கும் சொந்தமான 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் விஜய்யையும் அவரது வீட்டில் வைத்து […]
