கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 205 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 338 பேர் உயிரிந்துள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
