மலிவான அரசியல் செய்து வரும் ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி அமைக்கப்படும் என்று அறிவித்ததன் கீழ் புதுக்கோட்டை […]
