உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கிராமத் தலைவராக 97 வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பூரணவாஸ் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டியான வித்யா தேவி போட்டுயிட்டு வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆரத்தி மீனாவைவிட 207 வாக்குகள் அதிகம் பெற்று கிராம தலைவராக வித்யா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வித்யா தேவி 843 வாக்குகளையும் மீனா 636 வாக்குகளையும் தேர்தலில் பெற்றனர். 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். […]
