அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
