சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முழுநேர அரசு ஊழியராக வேண்டும், […]
