இப்போது கமரகட்டு கொடுத்து ஏமாத்தி விட்டோம் என்று சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் திமுக வெற்றி குறித்து திமுக. தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இது ஜனநாயகத்துக்கான வெற்றியாக அமைந்து இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி என்பது ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 இடங்களில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சதியின் […]
