எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்கோட்டை ஆத்து மேடு காலனியில் சத்யராஜ்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சத்யராஜ் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நேற்று காலை சத்யராஜ் மதுரையிலிருந்து சண்டிகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் […]
